< Back
மாநில செய்திகள்
தேனியில்  மாவட்ட அளவிலான செஸ் போட்டி
தேனி
மாநில செய்திகள்

தேனியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

தினத்தந்தி
|
16 Oct 2022 10:52 PM IST

தேனியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது

தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி 38-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் தேனியில் நடந்தது. அகாடமி பொருளாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். போட்டிகளை ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானுல்லா தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வயது வாரியாக 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அகாடமி தலைவர் சையது மைதீன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்

Related Tags :
மேலும் செய்திகள்