< Back
மாநில செய்திகள்
தேனியில்  மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி படுகாயம்
தேனி
மாநில செய்திகள்

தேனியில் மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி படுகாயம்

தினத்தந்தி
|
11 Nov 2022 12:15 AM IST

தேனியில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி கமலாதெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34). நேற்று முன்தினம் இரவு இவர், தனது மனைவி ஈஸ்வரியுடன் தேனி பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அதற்காக அவர்கள் சாலையின் மைய தடுப்புச்சுவர் அருகில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக தேனி கே.ஆர்.ஆர். நகரை சேர்ந்த கவின் என்பவர் மோட்டார் சைக்கிளை அசுர வேகத்தில் ஓட்டி வந்து, சிவக்குமார், ஈஸ்வரி ஆகியோர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். அதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கவின் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்