< Back
மாநில செய்திகள்
கூடலூரில்பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
தேனி
மாநில செய்திகள்

கூடலூரில்பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
24 Sept 2023 12:15 AM IST

கூடலூரில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று, கூடலூரில் உள்ள கூடலழகிய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த பூஜையில் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். இதேபோல், கூடலூரில் சுரங்கனார் நீர்வீழ்ச்சி அருகே அமைந்துள்ள கூத்த பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Related Tags :
மேலும் செய்திகள்