தேனி
கூடலூரில்ரூ.56 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்; 3 பேர் கைது
|கூடலூரில் லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர் அருகே லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையில் போலீசார் தமிழக எல்லை குமுளி பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் ரூ.43 ஆயிரத்து 440 மதிப்பிலான 816 லாட்டரி சீட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குள்ளப்புரம் பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 54), முருகன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை தலைமையில் போலீசார் கூடலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியை சேர்ந்த ஜவஹர் (59) என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.12 ஆயிரத்து 680 மதிப்புள்ள 30 லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.