< Back
மாநில செய்திகள்
கூடலூரில்  போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊா்வலம்
தேனி
மாநில செய்திகள்

கூடலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊா்வலம்

தினத்தந்தி
|
5 Aug 2022 10:01 PM IST

கூடலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

கூடலூரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் துறை, பொன்னையா கவுடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தை கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் சென்றது. ஊர்வலத்தின்போது போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்