< Back
மாநில செய்திகள்
அரசு, தனியார் அலுவலகங்களில்  பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு புகார் பெட்டி
தேனி
மாநில செய்திகள்

அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு புகார் பெட்டி

தினத்தந்தி
|
28 Nov 2022 6:45 PM GMT

தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு புகார் பெட்டி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு புகார் பெட்டி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் பாதுகாப்பு புகார் பெட்டி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி அரசு அலுவலகங்களுக்கான பாதுகாப்பு புகார் பெட்டிகளை துறை சார்ந்த அலுவலர்களுக்கு வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், "பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் அது குறித்த புகார்களை தயக்கமின்றி இந்த பெட்டியில் தெரிவிக்கலாம்" என்றார். முன்னதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா தேவி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்