< Back
மாநில செய்திகள்
கோபியில்   டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு
மாநில செய்திகள்

கோபியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
19 July 2022 10:55 PM IST

டெங்கு காய்ச்சல்

கோபி கபிலர் வீதியில் உள்ள நகரசபை ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கோபி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கார்த்திக் கலந்து கொண்டு ஏ.டி.எஸ். வகை கொசுக்களால் எவ்வாறு டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது எனவும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

இதில் துப்புரவு ஆய்வாளர் சவுந்தராஜன், களப்பணி உதவியாளர் காளிமுத்து, தூய்மை பாரத பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்