< Back
மாநில செய்திகள்
கோபியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ஈரோடு
மாநில செய்திகள்

கோபியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
30 Sept 2023 2:31 PM IST

கோபியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கடத்தூர்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல், கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கச்சேரிமேடு, மார்க்கெட், சிக்னல், கரட்டூர் வழியாக குள்ளம்பாளையம் வரை சென்று மீண்டும் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் போலீசார், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்