< Back
மாநில செய்திகள்
கோபி நகராட்சியில்  டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதி மொழி ஏற்பு
ஈரோடு
மாநில செய்திகள்

கோபி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதி மொழி ஏற்பு

தினத்தந்தி
|
24 Sept 2023 3:24 AM IST

கோபி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

கடத்தூர்

கோபி நகராட்சியில், நகராட்சி தலைவர் என்.ஆர். நாகராஜ் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் சசிகலா, துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர் நிரூபன் சக்கரவர்த்தி மற்றும் மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பில் பங்கேற்றனர்.

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு புழு உருவாகும் தண்ணீர் தொட்டிகள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், ஆட்டுக்கல், சிமெண்டு தொட்டிகள், பிளாஸ்டிக் கப்புகள், தேவையற்ற உடைந்த பொருட்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் அவற்றை அப்புறப்படுத்தியும், மருந்து ஊற்றியும் டெங்கு கொசு புழுக்களை அளிக்க வேண்டும் என்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுபவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்