< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கயத்தாறு பேரூராட்சியில்பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
|21 Sept 2023 12:15 AM IST
கயத்தாறு பேரூராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சி 13-வது வார்டில் முத்தாரம்மன் கோவில் தெருவில் தெற்கு பகுதியில் 15-வது மானிய நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை கலந்து கொண்டு அந்த பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்னப்பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.