சேலம்
போதைப்பொருட்கள் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
|போதைப்பொருட்கள் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கலெக்டரிடம், பா.ம.க.வினர் கலெக்டர் கார்மேகத்திடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணையன், மாவட்ட தலைவர்கள் முருகேசன், மாணிக்கம், முத்துசாமி, செயலாளர்கள் ராஜசேகர், வக்கீல் விஜயராசா, செல்வக்குமார், சிவா மற்றும் நிர்வாகிகள் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கார்மேகத்திடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
இளைஞர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தடையின்றி கிடைப்பதால் அதற்கு அவர்கள் அடிமையாகி வருவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே சேலம் மாவட்ட எல்லைக்குள் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் கண்காணிப்பை அதிகரிப்பதுடன் போதைப்பொருட்கள் விற்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.