< Back
மாநில செய்திகள்
ஈரோடு: போலீஸ்காரரை தாக்கிய லாரி டிரைவர் சிறையில் அடைப்பு
மாநில செய்திகள்

ஈரோடு: போலீஸ்காரரை தாக்கிய லாரி டிரைவர் சிறையில் அடைப்பு

தினத்தந்தி
|
7 Jun 2022 1:56 PM IST

ஈரோடு அருகே குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் போலீசாரை தாக்கியதால் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ் (வயது 35), லாரி டிரைவர். இவர் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அம்மாபேட்டை-மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் நாகராஜ் தனது பைக் இன்ஜினிற்கு ஆயில் இலவசமாக மாற்றி தர கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அது சம்பந்தமாத அம்மாபேட்டை போலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பொன்னையன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் சென்று நாகராஜை எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் நாகராஜ் குடிபோதையில் இருந்ததால், இருசக்கர வாகனத்தை காலையில் வந்து போலீஸ் நிலையத்தில் எடுத்துச் செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர்.

அதற்கு நாகராஜ் தலைமை காவலரின் சட்டையை பிடித்து அவரிடம் இருந்த பேனாவால் இடது காதுக்கு மேல் குத்தியுள்ளார் மேலும் தலைமை காவலரின் இடது கை பெருவிரலை கடித்து உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் தலைமை காவலர் முருகன் அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் நாகராஜை போலிஸ் நிலையம் பிடித்து வந்து தலைமை காவலர் கொடுத்த புகாரின்பேரில் நாகராஜ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்