< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில்சின்ன வெங்காயம் விலை உயர்வு
|6 Sept 2023 3:23 AM IST
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் விலை உச்சத்தை எட்டியது. ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.150 வரை விற்பனையானது. கடந்த மாதம் சின்ன வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30-க்கு விற்பனையானது.
இந்தநிலையில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், மீண்டும் விலை உயர்ந்தது. இதனால் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது.