< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது: ஜெயக்குமார்
|3 March 2023 9:39 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜெயக்குமார் மேலும் கூறியாதாவது:-
அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். வரும் காலங்களில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும். அதிமுகவை பொறுத்தவரை கட்சி எழுச்சியாகவே உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு பிற கட்சிகள் பயந்தன. எந்த தேர்தலிலும் இதுபோல திமுக பயந்ததது கிடையது. திமுக 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து போலியான வெற்றியை பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்ததுள்ளது" என்றார்.