< Back
மாநில செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ளகால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்;வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ளகால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்;வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது

தினத்தந்தி
|
2 March 2023 2:53 AM IST

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.

கோமாரி தடுப்பூசி

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கு 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் ஈரோடு மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. ஈரோடு அருகே உள்ள கருவில்பாறை வலசில் நடந்த முகாமினை கால்நடை பராமரிப்புத்துறை ஈரோடு மண்டல இணை இயக்குனர் பழனிவேல் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்தில் இருந்து தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது.

3,34,750 கால்நடைகள்

கால்நடை வளர்ப்பில் கோமாரி நோய் என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நோயால் கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும், சினை பிடிப்பு தடைபடும். அதனால் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க 6 மாதத்திற்கு ஒருமுறை என ஆண்டுக்கு 2 முறை இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வருகிற 21-ந்தேதி வரை முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 34 ஆயிரத்து 750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மருந்துகள் பெறப்பட்டு உள்ளன. கால்நடை உதவி டாக்டர்கள் தலைமையில், 96 குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்து, அவற்றை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கால்நடை டாக்டர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்