< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
|28 Jan 2023 3:29 AM IST
ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
வக்கீல்கள் மீது தாக்குதல் நடைபெறுவதை கண்டித்தும், தர்மபுரியில் வக்கீல் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோர்ட்டு புறக்கணிப்பு பணியில் ஈடுபடுவதாக வக்கீல்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு அட்வகேட் அசோசியேசன், ஈரோடு பார் அசோசியேசன் சார்பில் நேற்று ஒருநாள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு, பவானி, அந்தியூர், கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை என மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் வக்கீல்கள் இந்த கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.