< Back
மாநில செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில்சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,926 பேர் எழுதினர்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,926 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
27 Aug 2023 3:18 AM IST

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2 ஆயிரத்து 926 பேர் எழுதினார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2 ஆயிரத்து 926 பேர் எழுதினார்கள்.

பாதுகாப்பு

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை எழுதுவதற்காக 789 பெண்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 567 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான வினாத்தாள் சென்னையில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று காலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் முன்னிலையில் அதிகாரிகள் வினாத்தாள் பண்டல்களை எடுத்து தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

2,926 பேர் எழுதினர்

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 2 மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் கொண்டு செல்லப்பட்டது. தேர்வை எழுதுவதற்காக காலையில் இருந்தே விண்ணப்பதாரர்கள் வந்தனர். நுழைவு வாயிலில் பலத்த சோதனைக்கு பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கைப்பைகள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை நுழைவு வாயிலிலேயே அவர்கள் வைத்துவிட்டு உள்ளே சென்றனர். நுழைவு சீட்டை போலீசார் சரிபார்த்துவிட்டு ஒவ்வொருவராக உள்ளே செல்ல அனுமதித்தனர்.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. காலையில் நடந்த பிரதான எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 939 பேரும், மதியம் நடந்த தமிழ் மொழி திறனறிவு தேர்வை 2 ஆயிரத்து 926 பேரும் எழுதினர்.

ஐ.ஜி.பவானீஸ்வரி

தேர்வு மையத்தை கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. கே.பவானீஸ்வரி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கே.பாலமுருகன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் எஸ்.பவித்ரா, என்.மணிவர்மன், ஆறுமுகம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்