சென்னை
எண்ணூரில் மாமூல் கேட்டு தகராறு செய்த ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு - 5 பேர் கைது
|எண்ணூரில் மாமூல் கேட்டு தகராறு செய்த ரவுடியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர், அன்னை சிவகாமி நகரை சேர்ந்த சிறு ரவுடிகளிடம் மாமூல் கேட்பது வாடிக்கை.
புத்தாண்டு அன்று நள்ளிரவு இதேபோல் சிறு ரவுடிகளிடம் மாமூல் கேட்டு தகராறு செய்த தினேஷ், ராஜேஷ்(30) என்பவரை வெட்ட அரிவாளுடன் பாய்ந்தார். அப்போது ராஜேசின் நண்பர்கள் தினேசை மடக்கிப்பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறித்து தினேசை சரமாரியாக வெட்டினர்.
இதில் தினேஷின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 30-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்களான மதன்(24), மணி(29), கருப்பு மணி(22) மற்றும் பிரகாஷ்(22) ஆகிய 5 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகிறார்கள்.