விழுப்புரம்
திண்டிவனத்தில் பெண்ணிடம் நூதன முறையில் பணம் அபேஸ்
|திண்டிவனத்தில் நூதன முறையில் பெண்ணிடம் பணத்தை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம்,
குறுந்தகவல்
திண்டிவனம் பூதேரி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி லட்சுமி (வயது 42), தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.32 ஆயிரம் கடனாக பெற்றார்.
இதை எடுப்பதற்காக சம்பவத்தன்று லட்சுமி திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்மநபரிடம் ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார்.
பின்னர், அவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் வரவில்லை என்று கூறி கார்டை திருப்பி கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து லட்சுமியின் வங்கி கணக்கில் இருந்து அவரது மொபைல் எண்ணுக்கு குறந்தகவல் ஒன்று வந்தது.
மர்மநபருக்கு வலைவீச்சு
அதில் ரூ. 32 ஆயிரம் எடுக்கப்பட்டதாக இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வங்கியில் சென்று கேட்டபோது ஏ.எடி.எம். கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தொிவித்தனர்.
அதன்பிறகே லட்சுமிக்கு, அந்த மர்மநபர் பணத்தை எடுத்துவிட்டு, ஏமாற்றி சென்றது தெரிந்தது. உடனே இதுகுறித்து அவர் திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனா்.