< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர், தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
17 March 2023 12:15 AM IST

எட்டயபுரம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர், தொழிலாளி ஆகியேர் தற்கொலை செய்து கொண்டனர்.

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர், தொழிலாளி ஆகியேர் தற்கொலை செய்து கொண்டனர்.

லாரி டிரைவர்

எட்டயபுரம் அருகே உள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் கண்ணன்(வயது 34). லாரி டிரைவர். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த இவரது மனைவி கனகவல்லி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லாரியில் இருந்து இறங்கி வந்த கண்ணன், அதேஊரிலுள்ள தந்தை பால்ராஜ் வீட்டில் தங்கி இருந்தார்.

விஷம் குடித்து தற்கொலை

நேற்று முன்தினம் கீழஈரால் அருகிலுள்ள வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் குளிர்பானத்தில் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி சாவு

மேலும், எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் மேல தெருவை சேர்ந்த வேலுத்தேவர் மகன் கருப்பசாமி(50). தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டு அருகில் உள்ள குளியல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்