< Back
மாநில செய்திகள்
வெவ்வேறு விபத்துகளில்   தொழிலாளி உள்பட 2 பேர் பலி
தேனி
மாநில செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

தினத்தந்தி
|
8 Sept 2022 10:33 PM IST

வெவ்வேறு விபத்துகளில் ெதாழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர்.

தொழிலாளி

தேனி மாவட்டம் கூடலூர் 3-வது வார்டு பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 45). கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர், கூடலூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பாரு பண்ணை அருகே சென்றபோது, ரோட்டில் டிராக்டரை நிறுத்தி சிலா் வாழை மரங்களை ஏற்றி கொண்டிருந்தனர். பின்னர் மோட்டார்சைக்கிளில் வந்த சுந்தரம் டிராக்டரை ஏன் இப்படி இருட்டில் நிறுத்தி உள்ளீர்கள் என்று டிரைவரிடம் கேட்டு கொண்டிருந்தார். அப்போது கம்பம் நோக்கி சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக அவா் மீது மோதியது.

பெண் பலி

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகன் மனைவி பஞ்சவர்ணம் (36). நேற்று இவர், மாடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் மீனாட்சிபுரம் விலக்கு அருகே வந்தபோது, வத்தலக்குண்டு நோக்கி சென்ற ஆட்டோ இவர் மீது மோதியது. இதில் கீேழ விழுந்து படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்