தேனி
வெவ்வேறு விபத்துகளில்முதியவர் உள்பட 2 பேர் பலி
|வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
முதியவர் பலி
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கம்பம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 75). நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் முன்பு சாலையை கடந்து நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக, கக்கன்ஜி தெருவை சேர்ந்த கண்ணன் (34) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், லட்சுமணன் மீது மோதியது. இந்த விபத்தில் லட்சுமணன் பலத்த காயம் அடைந்தார்.
அவர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து லட்சுமணனின் மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், கண்ணன் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் சின்ன முனியாண்டி. இவரது மகன் துரைப்பாண்டி (30). கடந்த மாதம் 23-ந்தேதி இவர், வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க துரைப்பாண்டி பிரேக் போட்டார்.
அப்போது நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீேழ விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.