< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
கடலூரில்வாலிபர் மீது தாக்குதல்4 பேர் மீது வழக்கு
|10 Jan 2023 12:31 AM IST
கடலூரில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
கடலூர் அருகே உள்ள வடக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). இவர் சம்பவத்தன்று இரவு வண்டிக்குப்பம் சமத்துவபுரம் அருகே தனது நண்பர்கள் 2 பேருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக குடிபோதையில் மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வேகமாக வந்துள்ளனர். இதை பார்த்த பிரகாஷ், மெதுவாக செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும், பிரகாசை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.