< Back
மாநில செய்திகள்
கூடலூர் பகுதியில்காய்த்து தொங்கும் இலவங்காய் :விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி
மாநில செய்திகள்

கூடலூர் பகுதியில்காய்த்து தொங்கும் இலவங்காய் :விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
1 Jan 2023 6:45 PM GMT

கூடலூர் பகுதியில் இலவங்காய்கள் காய்த்து தொங்குகின்றன.

கூடலூர் அருகே கல் உடைச்சான் பாறை, பெருமாள் கோவில் புலம், கழுதை மேடு, புது ரோடு ஆகிய பகுதிகளில் மானாவாரி காடுகள் உள்ளன. மேலும் சுரங்கனார், வண்ணாத்திப்பாறை, பளியன்குடி ஆகிய வனப்பகுதிகளில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் உயர் ரக இலவ மரங்கள் வளர்க்கப்பட்டு வருகி்ன்றன. இதில் வனப்பகுதியில் உள்ள மரங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இலவம் காய்களை பறித்து கொள்ள மாவட்ட வன அலுவலகத்தில் ஏலம் விடுவார்கள் இதன் மூலம் வனத்துறைக்கு ஆண்டு வருமானமாக பல லட்சம் ரூபாய் வரை கிடைத்து வருகிறது.

இதற்கிடையே மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் இலவம் தோப்புகளை சீசனுக்கு முன்னதாகவே வியாபாரிகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டு பணத்தை மொத்தமாக பெற்றுக்கொள்கின்றனர். சிலர் காய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரம் பிரித்து சில்லரை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் போடி, வருசநாடு பகுதி பஞ்சு வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் பஞ்சுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இலவங்காய்கள் கூடுதலாக காய்த்து தொங்குகிறது. இதனால் அதிக மகசூல் கூடுதலாக கிடைக்கும் என்று கூடலூர் பகுதி மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்