< Back
மாநில செய்திகள்
கூடலூர் பகுதியில்மதுபானம் விற்ற 2 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

கூடலூர் பகுதியில்மதுபானம் விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
22 March 2023 12:15 AM IST

கூடலூர் பகுதியில் மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர் வடக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தலைமையில போலீசார் கருநாக்கமுத்தன்பட்டி சாலை தனியார் மண்டபம் அருகே ரோந்து சென்றனர். அப்போது கூடலூர் 6-வது வார்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பகவதி ராஜ் (வயது 34) என்பவர், அரசு மதுபாட்டில்களை மொத்தமாக விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் கூடலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 12-வது வார்டு பாலசுப்பிரமணியம் பிள்ளை தெருவை சேர்ந்த பிச்சைமணி (50) என்பவர் மதுபாட்டில்களை மொத்தமாக விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்