தூத்துக்குடி
முன்விரோதத்தில் தாய், மகன் மீது தாக்குதல்
|சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் தாய், மகன் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் அருகேயுள்ள பெருமாள்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பால்துரை (வயது 24). வீட்டு காம்பவுண்டு சுவர்கட்டுவது தொடர்பாக இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கிளி என்ற பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துவருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரச்னைக்குரிய இடத்தில் பால்துரை, கட்டுமான பணியை தொடங்கியதால் கிளி கண்டித்தார். அப்போது கிளிக்கு ஆதரவாக அவரது சகோதரர்களான சுடலைமணி மகன்கள் கணேசன், லட்சுமணன் மற்றும் செந்தில் ஆகிய 3பேரும் பால்துரையை அவதூறாக பேசி தாக்கினர். இதை தடுக்க முயன்ற அவரது தாயும் தாக்கப்பட்டார். மேலும் பால்துரையின் சகோதரிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர். நாகராஜன் வழக்குப்பதிவு செய்து கணேசன், லட்சுமணன் ஆகிய இருவரையும் கைதுசெய்தார். தலைமறைவாக உள்ள செந்திலை போலீசார் தேடி வருகின்றனர்.