< Back
மாநில செய்திகள்
மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருவாரூர்
மாநில செய்திகள்

மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தினத்தந்தி
|
24 Oct 2023 7:15 PM GMT

முத்துப்பேட்டை அருகே கதிர் அடிக்கும் எந்திரத்தை லாரியில் ஏற்றிச்சென்றபோது மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே கதிர் அடிக்கும் எந்திரத்தை லாரியில் ஏற்றிச்சென்றபோது மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.


கதிர் அடிக்கும் எந்திரம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த சிறுபட்டாக்கரை கிராமத்தில் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அறுவடை பணிகளுக்காக சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கதிர் அடிக்கும் எந்திரத்தை கொண்டு வந்து வாடகைக்கு அமர்த்தி தொழிலாளர்கள் கதிர் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சேலம் பகுதியில் இருந்து கதிர் அடிக்கும் எந்திரத்தை தொழிலாளர்கள் ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு முத்துப்பேட்டையை அடுத்த சிறுபட்டாக்கரை கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

மின்சாரம் பாய்ந்தது

அப்போது பட்டவெளி செல்லும் சாலையில் லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் தாழ்வாக இருந்த உயர் மின் அழுத்த கம்பியில் லாரியில் இருந்த கதிர் அடிக்கும் எந்திரம் பட்டு உரசியது.அப்போது லாரியில் சென்ற சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பமசமுத்திரம் தெற்குதெரு பகுதியை சேர்ந்த மணி மகன் ரவிக்குமார்(வயது 26), கதிர் அடிக்கும் எந்திரம் மின் கம்பி மீது உரசுவதை கண்டு டிரைவரிடம் எச்சரிப்பதற்காக லாரியை தட்டினார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

வாலிபர் பலி

இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் ரவிக்குமாரை மீட்டு முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்சாரம் தாக்கி பலியான ரவிக்குமார் உடலை கைப்பற்றி பிரேத ்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி டிரைவர் கைது

லாரியை அஜாக்கிரதையாக ஒட்டிச்சென்ற டிரைவர் அப்பமசமுத்திரம் ஒட்டத்தெரு பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் விஜயகுமாரை(28) கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்