< Back
மாநில செய்திகள்
சிதம்பரத்தில்  14 வயது சிறுமிக்கு திருமணம்; தீட்சிதர்கள் 3 பேர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

சிதம்பரத்தில் 14 வயது சிறுமிக்கு திருமணம்; தீட்சிதர்கள் 3 பேர் கைது

தினத்தந்தி
|
23 Sept 2022 12:15 AM IST

சிதம்பரத்தில் 14 வயது சிறுமிக்கு நடந்த திருமணம் தொடா்பாக தீட்சிதர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

சிதம்பரம் வடக்கு சன்னதி வீதியை சேர்ந்தவர் 46 வயதுடைய தீட்சிதர். இவருடைய 14 வயது மகள், தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், சிதம்பரம் படித்துறை இறக்கத்தை சேர்ந்த 24 வயதுடைய தீட்சிதர் ஒருவருக்கும் கடந்த 27.1.2021 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக, போலீசாருக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் கடலூர் டெல்டா பிரிவு போலீசார் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலர் தவமணி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 14 வயது சிறுமிக்கு 24 வயதுடைய தீட்சிதருடன் திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை, அவரை திருமணம் செய்த தீட்சிதர் மற்றும் இவரது தந்தை ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீட்சிதர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்