< Back
மாநில செய்திகள்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..!

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..!

தினத்தந்தி
|
25 Nov 2023 9:54 AM IST

சென்னையில் வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,755-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.80.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்