< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செங்கல்பட்டில் 6 தாலுகாக்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
|6 Dec 2023 3:08 PM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் , தாம்பரம் , செங்கல்பட்டு , வண்டலூர் , திருப்போரூர் , திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்