< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,096 பேர் எழுதினர்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,096 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
20 Nov 2022 8:11 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,096 பேர் எழுதினர்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குடிமைப்பணிகள் எனப்படும் குரூப்-1 தேர்வை அறிவித்திருந்தது. இந்த நிலையில் அதற்கான தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

இதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, சிங்கப்பெருமாள் கோவில் அரசு பள்ளி, ஆத்தூர், மெல்ரோசாபுரம், காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம். பள்ளி, கல்லூரிகள் என மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் தேர்வுகள் நடைபெற்றது.

இந்த தேர்வுக்காக மொத்தம் 6 ஆயிரத்து 95 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 3 ஆயிரத்து 96 பேர் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை கல்லூரியில் குரூப்-1 தேர்வு நடைபெற்ற மையத்தை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்