மதுரை
கோடைகாலத்தில் மின்தடை ஏற்பட்டால் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்- மின்வாரியம் அறிவிப்பு
|கோடைகாலத்தையொட்டி எதிர்பாராத மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலத்தையொட்டி எதிர்பாராத மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் கோடைகாலத்தை எதிர்கொள்ளும் விதமாக பொதுமக்கள் நலன் கருதி மின்தடை, மழையினால் ஏற்படும் மின்கம்பங்கள் சேதமடைதல், அதனால் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடைகாலத்தில் எதிர்பாராத விதமாக மின்தடை ஏற்பட்டால் மின்நுகர்வோர்களை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
அதன்படி தமுக்கம், தல்லாகுளம், கோரிப்பாளையம், செல்லூர், அகிம்சாபுரம், தத்தனேரி, தாகூர்நகர், ரேஸ்கோர்ஸ், மண்மலை மேரு, டி.ஆர்.ஓ.காலனி ரிசர்வ் லைன், சொக்கிகுளம், கிருஷ்ணாபுரம் காலனி பகுதியினர் உதவி செயற்பொறியாளர் ராமசந்திரனை 94458 52932 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அண்ணாநகர், சதாசிவம்நகர், அரவிந்த் ஆஸ்பத்திரி பகுதியினர் மூக்கையனை 94458 52850 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கே.கே.நகர், ஆர்ச், மாட்டுத்தாவணி, பூமார்க்கெட், வளர்நகர், உத்தங்குடி பகுதியினர் முருகனை 94458 52851 என்ற எண்ணில் தொடர்பு ெகாள்ளலாம். புதூர், சூர்யாநகர், மூன்றுமாவடி, அழகர்நகர் பகுதியினர் ஏ.முருகனை 94458 52847 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலமடை, கோமதிபுரம், வண்டியூர், சவுராஸ்டிரா காலனி, ரிங்ரோடு, மஸ்தான்பட்டி, சிவகங்கை ரோடு, பாண்டிகோவில் பகுதியினர் செல்வராஜை 94458 52849 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மீனாட்சி அம்மன் கோவில்
திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், பார்க்டவுன், உச்சபரம்புமேடு, மகாலட்சுமி காலனி, பொறியாளர்நகர், பாமாநகர், வள்ளுவர்நகர், எம்.ஜி.நகர், ஆனையூர், பனங்காடி பகுதியினர் நாகராஜை 94458 52855 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். சுப்பிரமணியபுரம் தெற்குவெளி வீதி, பெரியார் பஸ்நிலையம், எல்லீஸ்நகர், ரெயில்வேநிலையம், தமிழ் சங்கம், ஒர்க்ஷாப் ரோடு, ஆரப்பாளையம், புட்டு தோப்பு, டவுன்ஹால்ரோடு, யானைக்கல் பகுதியினர் நவநீதகோபாலை 94458 52945 எண்ணிலும், மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை வீதி, மாசி வீதி, மகால், பந்தடி, குயவர்பாளையம் ரோடு, அரசமரம், மாகாளிப்பட்டி பகுதியினர் கந்தசாமியை 9445852951 என்ற எண்ணிலும், தெப்பம், முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை, ஐராவதநல்லூர், அனுப்பானடி, டீச்சர்ஸ் காலனி, சிந்தாமணி பகுதியினர் ெசல்வராஜை 94458 52939 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
விளாங்குடி, சாந்திநகர், கூடல்நகர், பைபாஸ் ரோடு, ஞானஒளிபுரம், பாத்திமா காலேஜ், கோச்சடை, கீழவாசல் பகுதியினர் ராஜாஉசேனை 94458 52958 என்ற எண்ணிலும், எஸ்.எஸ். காலனி, பைபாஸ்ரோடு, பொன்மேனி, பழங்காநத்தம், பைக்காரா, பசுமலை, மூலகரை, திருப்பரங்குன்றம், திருநகர் பகுதியினர் சிவக்குமாரை 94458 52957 என்ற எண்ணிலும், வில்லாபுரம், ஜீவா நகர், ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரம், டி.வி.எஸ்.நகர், சத்தியசாய் நகர் பகுதியினர் ஜெயராமனை 94458 52971 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரா தெரிவித்துள்ளார்.