< Back
மாநில செய்திகள்
கட்டடத் தொழிலாளர்கள் விபத்தின்போது உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு
மாநில செய்திகள்

கட்டடத் தொழிலாளர்கள் விபத்தின்போது உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

தினத்தந்தி
|
17 March 2023 3:30 PM IST

கட்டட தொழிலாளர்கள் விபத்தின்போது உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளார் முகமது நசிமுத்தின் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் கடிதங்களில், 25.05.2022 அன்று நடைபெற்ற 79வது வாரிய கூட்டத் தீர்மானம் இனம் 5-ன்படி, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும், தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடுமாறு கோரியுள்ளார்.

2. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் செயற்குறிப்பினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நல நிதி செலுத்தும் தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1.00,000/-லிருந்து ரூ.2.00.000/- ஆக உயர்த்தி வழங்கவும்.

இதனால் ஏற்படும் செலவினத்தை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய நல் நிதியிலிருந்து மேற்கொள்ளவும், மேலும், இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகையினை 01.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்