< Back
மாநில செய்திகள்
திண்டிவனத்தில் பட்டப்பகலில் துணிகரம்: தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை கொள்ளை-மர்மநபர்களுக்கு வலைவீச்சு
விழுப்புரம்
மாநில செய்திகள்

திண்டிவனத்தில் பட்டப்பகலில் துணிகரம்: தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை கொள்ளை-மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
17 Oct 2023 12:07 AM IST

திண்டிவனத்தில் பட்டப்பகலில் தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகையை கொள்ளையடித்து சென்று மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் கர்ணாவூர் பேட்டைரோடு ஓடை தெருவை சேர்ந்தவர் கோபாலகண்ணன் (வயது 47). இவர் நடுவனந்தல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சுஜிதா (40). இவர் அன்னம் புத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இருவரும் நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றனர். மீண்டும் மாலை 5 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. அதில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகையை காணவில்லை. அதை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையைகொள்ளையடித்துச் சென்றமர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்