< Back
மாநில செய்திகள்
பூதப்பாடியில் ரூ.7 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ஈரோடு
மாநில செய்திகள்

பூதப்பாடியில் ரூ.7 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

தினத்தந்தி
|
16 Jun 2023 3:12 AM IST

பூதப்பாடியில் ரூ.7 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்த ஆண்டுக்கான பருத்தி ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஈரோடு வேளாண் விற்பனை குழு செயலாளர் சாவித்திரி ஏலத்தை தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் முதல் நாள் என்பதால் 294 மூட்டைகளில் பருத்தி கொண்டு வரப்பட்டன. இதில் பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 160-க்கும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 819-க்கும் என மொத்தம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்து 979-க்கு ஏலம்போனது.

Related Tags :
மேலும் செய்திகள்