< Back
மாநில செய்திகள்
அவுரிவாக்கம் ஊராட்சியில் மீன் இறக்குமிடத்தில் படகு அணையும் தளம் அமைக்க வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

அவுரிவாக்கம் ஊராட்சியில் மீன் இறக்குமிடத்தில் படகு அணையும் தளம் அமைக்க வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
28 Nov 2022 5:22 PM IST

அவுரிவாக்கம் ஊராட்சியில் மீன் இறக்குமிடத்தில் படகு அணையும் தளம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி தொழில்

பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் அருகே உள்ளது அவுரிவாக்கம் ஊராட்சி. இங்கு அவுரிவாக்கம், கீழ்குப்பம், மேல்குப்பம், பாக்கம், அவுரிவாக்கம் காலனி, இருளர் காலனி உட்பட 8 குக்கிராமங்களில் 527 குடும்பங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி பழவேற்காடு ஏரிக்கரையில் உள்ளதால் இவர்கள் படகுமூலம் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் அவுரிவாக்கம் மற்றும் கணவன் துறை ஆகிய இரு கிராமங்களில் வரலாற்றில் இடம் பிடித்து பழங்கால இடமாக விளங்குகிறது. சோழ மன்னர்களின் படகு துறையாக இருந்து வெளிநாட்டுக்கு வணிகம் செய்த பகுதியாகும்.

படகு அணையும் தளம்

ஊராட்சியில் உள்ள அவுரிவாக்கம், கணவன் துறை, கீழ்குப்பம், மேல்குப்பம் போன்ற பகுதிகளில் மீன் பிடி தொழிலுக்கு ஏற்ப எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் படகில் மீன்பிடிக்க செல்கின்றனர். பிடித்த மீன்களை கரைக்கு செல்ல முற்படும்போது விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும். கொண்டு வரும் மீன்கள் ஏரியில் விழுந்து விடும் சூழ்நிலை இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீனவர்களின் நலன் கருதி இந்த ஊராட்சிகளில் மீன் இறக்கு இடத்தில் படகு அணையும் தளம், மீன் ஏல கூடம், மீன்பிடி வலைகள் உலர் தளம் உட்பட அடிப்படை வசதிகளை தமிழக மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்