< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள்பயன்படுத்த தடை
|29 Jun 2023 12:15 AM IST
ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் கமால்தீன் தலைமையில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கவுன்சிலர்கள், ஆத்தூர் நகர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில், ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது, இறைச்சி கழிவுகளை கொட்டுவது மற்றும் சுகாதார கேடுகளை ஏற்படுத்தாமல் இருப்பது தொடர்பாகவும் குப்பைகளை தரம் பிரித்து நகர பஞ்சாயத்து ஊழியர்களிடம் வழங்குவது போன்றவை குறித்து ஆலோசனை நடந்தது. மேலும், நாளைமறுநாள்(சனிக்கிழமை) முதல் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.