< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
|9 Sept 2022 7:42 PM IST
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமலாபுரம், மரிக்குண்டு, தேக்கம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிமெண்டு சாலை அமைத்தல், வரத்து வாய்க்கால் மேம்பாட்டுப்பணி, அங்கன்வாடி மையம் கட்டும் பணி, ஊருணி மேம்பாட்டு பணிகள், மயானத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி போன்ற பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்மதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.