< Back
மாநில செய்திகள்
அந்தியூரில் தடுப்புச்சுவரில் மோதிய லாரி
ஈரோடு
மாநில செய்திகள்

அந்தியூரில் தடுப்புச்சுவரில் மோதிய லாரி

தினத்தந்தி
|
30 Sept 2023 2:30 PM IST

அந்தியூரில் தடுப்புச்சுவரில் லாாி மோதியது.

அந்தியூா்

அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து அண்ணாமடுவு வரை சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. இதில் பஸ் நிலையத்தில் இருந்து பழைய பெட்ரோல் பங்க் வரை சாலை விரிவாக்க பணிக்காக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் அங்குள்ள தடுப்புச்சுவர் அகற்றப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கோவையில் இருந்து தர்மபுரி நோக்கி குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்றது. டிரைவர் குமார் (வயது 25) லாரியை ஓட்டினார். அந்த லாரி அந்தியூர் பவானி ரோட்டில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. டிரைவர் குமார் காயமின்றி உயிர் தப்பினார். மாற்று லாரி கொண்டு வரப்பட்டு குளிர்பானங்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்