< Back
மாநில செய்திகள்
அந்தியூரில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி விற்பனை
ஈரோடு
மாநில செய்திகள்

அந்தியூரில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி விற்பனை

தினத்தந்தி
|
11 July 2023 4:00 AM IST

அந்தியூரில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி விற்பனையானது.

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, கோபி, கணக்கம்பாளையம், கீழ்வாணி, மூங்கில்பட்டி, எண்ணமங்கலம், வேம்பத்தி, வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 5,800 மூட்டை பருத்தி கொண்டுவரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்த பட்ச விலையாக 6 ஆயிரத்து 259 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 6 ஆயிரத்து 789 ரூபாய்க்கும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது. திருப்பூர், கோவை, தர்மபுரி, தூத்துக்குடி பகுதி வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை வாங்கிசென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்