< Back
மாநில செய்திகள்
அந்தியூர், தாளவாடி பகுதியில்   சாரல் மழை
ஈரோடு
மாநில செய்திகள்

அந்தியூர், தாளவாடி பகுதியில் சாரல் மழை

தினத்தந்தி
|
19 July 2022 2:29 AM IST

அந்தியூர், தாளவாடி பகுதியில் சாரல் மழை பெய்தது.

அந்தியூரில் நேற்று மதியம் 12 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மாலை 5.30 மணி வரை நீடித்தது. அந்தியூரில் வாரம்தோறும் திங்கட்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்வர். அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கி செல்வர். இந்த நிலையில் நேற்று அந்தியூர் பகுதியில் சாரல் மழை பெய்ததால், வாரச்சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.இதேபோல் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. இதன்காரணமாக தாளவாடி பகுதியில் விவசாய பணிகளும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்