< Back
மாநில செய்திகள்
அல்லிநகரத்தில்பெற்றோருக்கு கொலை மிரட்டல்:தொழிலாளிக்கு வலைவீச்சு
தேனி
மாநில செய்திகள்

அல்லிநகரத்தில்பெற்றோருக்கு கொலை மிரட்டல்:தொழிலாளிக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
23 March 2023 12:15 AM IST

தேனி அல்லிநகரத்தில் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி அல்லிநகரம் கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் ராஜேஷ். கூலித்தொழிலாளி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜேசுக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து அவர் தனது பெற்ேறாரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராேஜசின் பெற்றோர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ராஜேஷ் வீட்டின் கதவு மற்றும் பாத்திரங்களை அடித்து நொறுக்கினார். மேலும் பெற்றோரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளைச்சாமி அல்லிநகரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்