அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்கல்வி வழிகாட்டுதல் குழு- கல்வித்துறை உத்தரவு
|பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்டு குழு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11ம் வகுப்பிற்கும், 12ம் வகுப்பு முடிந்த மாணவர்கள் உயர்கல்விக்கும் செல்லவேண்டும் என்பது கல்வித்துறையின் நோக்கமாக உள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள்,11ம் வகுப்பில் என்னென்னெ பாடப்பிரிவுகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும், அதேபோல, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் என்னென்னெ படிப்புகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும் முக்கிய பாடப்பிரிவுகள் வாரியாக,வீடியோ வாரியாக பள்ளிக்கல்வித்துறை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உருவாக்கப்படவேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்டு குழு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளது என்பதையும், எந்த பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தால், பின்னாளில் என்ன வேலைக்கு செல்லமுடியும் என்பது பற்றிய விரிவான தகவல்களை எடுத்துரைக்கவேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.