< Back
மாநில செய்திகள்
அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள் தான்- சசிகலா
மாநில செய்திகள்

அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள் தான்- சசிகலா

தினத்தந்தி
|
31 July 2022 6:30 PM IST

அதிமுகவில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும்; தற்போதைய சூழல்கள் காலப்போக்கில் சரியாகி விடும் என்று சசிகலா பேசினார்.

சென்னை,

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா இன்று சந்தித்துப் பேசினார். சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சசிகலா, அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள் தான்' என்றார். மேலும்,அதிமுகவில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும்; தற்போதைய சூழல்கள் காலப்போக்கில் சரியாகி விடும்" என்றும் பேசினார்.

மேலும் செய்திகள்