< Back
மாநில செய்திகள்
ஒரே நாளில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

ஒரே நாளில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
8 Oct 2023 12:15 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குளத்தூர் அருகே உள்ள வேம்பார் பகுதியில் வைத்து முதுகுளத்தூரை சேர்ந்த நாகஜோதி (வயது 50) என்பவரை கொலை செய்து காருக்குள் வைத்து எரித்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்களான அண்ணாவி மகன்கள் மைக்கேல்ராஜ் (29), குழந்தை கனி (26), யுவராஜ் மகன் சுந்தர கணபதி என்ற கணபதி (26), சாயல்குடி உரைக்கிணறு பகுதியை சேர்ந்த இருதயராஜ் மகன் மைக்கேல்ராஜ் என்ற மாரி (27) ஆகியோரை குளத்தூர் போலீசார் கைது செய்தனர்.

இதே போன்று முள்ளக்காட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் முகேஷ் (20) என்பவரை கொலை முயற்சி வழக்கில் முத்தையாபுரம் போலீசாரும், இளம்பெண்ணை பாலியல் வன்முறை செய்ததாக தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்த சேவியர் மகன் யோசேப் (27), சிதம்பரநகர் திம்மையார் காலனியை சேர்ந்த வேல்சாமி மகன் வேல்முருகன் (35) ஆகிய 2 பேரை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாரும் கைது செய்தனர்.

இவர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தில் மைக்கேல்ராஜ், குழந்தை கனி, சுந்தர கணபதி, மைக்கேல்ராஜ், முகேஷ், யோசேப், வேல்முருகன் ஆகிய 7 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் உள்பட 144 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்