< Back
மாநில செய்திகள்
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாழை நட்ட பொதுமக்கள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாழை நட்ட பொதுமக்கள்

தினத்தந்தி
|
26 July 2023 12:15 AM IST

மேக்காமண்டபம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாழை நட்ட பொதுமக்கள்

தக்கலை,

அழகிய மண்டபத்தில் இருந்து திருவட்டார் பகுதிக்கு செல்லும் சாலையில் கடமலைகுன்றிலிருந்து மேக்காமண்டபம் சந்திப்பு வரை சாலையின் ஒரு பகுதி குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் சற்று சிரமத்தோடு செல்கின்றன. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் குழிகளில் வாழை மற்றும் செடிகளை நட்டுவைத்து உள்ளனர். இதை பார்த்த பிறகாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்