காஞ்சிபுரம்
பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐ.டி. ஊழியர் பலி
|பள்ளிப்பட்டு அருகே வசிக்கும் பாட்டியை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்த போது மாடு மீது மோதி ஐ.டி. ஊழியர் பலியானார்.
ஐ.டி. ஊழியர்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நந்திவரம் பெரியார் நகரில் 13-வது தெருவில் வசித்து வருபவர் வரதராஜன் (வயது 60). இவரது இளைய மகன் சீனிவாசன் (24). இவர் சென்னை ஐ.டி. கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கரிம்பேடு கிராமத்தில் வசிக்கும் தனது பாட்டியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நண்பர் தருண் (22) என்பவரை அழைத்துக் கொண்டு சீனிவாசன் கரிம்பேடு கிராமத்திற்கு சென்று கொண்டு இருந்தார்.
பலி
அப்போது கரிம்பேடு சுடுகாடு அருகே வரும்போது பசுமாடு ஒன்று குறுக்கே வந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மாடு மீது மோதி 2 பேரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சீனிசாசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
படுகாயமடைந்த தருண் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.