< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் சாவு
|26 Jan 2023 2:11 PM IST
சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பலியானார்.
திருத்தணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி மல்லிகா (வயது 57). இவர் கடந்த 8-ந் தேதி சமையல் செய்வதற்காக வீட்டில் அடுப்பு பற்ற வைத்த போது, எதிர்பாராதவிதமாக அவரது புடவையில் தீ பிடித்தது. இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் மல்லிகா அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர்.
பின்னர் படுகாயமடைந்த மல்லிகாவை அருகில் இருந்த மகன் தமிழரசன் மற்றும் உறவினர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி மல்லிகா உயிரிழந்தார். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.