< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குடும்பத் தகராறில் மனைவியின் அக்கா கணவரை கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்
|9 Feb 2024 10:57 PM IST
குடும்பத் தகராறில் மனைவியின் அக்கா கணவரை இளைஞர் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணமான நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு தனது அக்காவின் வீட்டிற்கு சென்ற ராஜேஸ்வரியை தன்னுடன் வருமாறு கூறி வெங்கடேசன் தகராறு செய்துள்ளார். அப்போது வெங்கடேசன் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரை சமரசம் செய்ய, ராஜேஸ்வரியின் அக்கா கணவர் சரவணன் சென்றபோது இருவருக்கும் இடையே கைகலப்பாகியுள்ளது. இதில் சரவணனை கட்டையால் அடித்து வெங்கடேசன் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.