< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் 3 இடங்களில் சதமடித்த வெயில்
|4 July 2024 7:46 PM IST
தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.எனினும், ஒருசில பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 3 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் 102.38 டிகிரி பாரன்ஹீட்டாகவும், மதுரை நகரில் 101.84 டிகிரி பாரன்ஹீட்டாகவும், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 100.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் வெப்பம் பதிவாகியுள்ளது.